தொழில் துறையில் 32,405 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை

தொழில் துறையில் நிகழாண்டு ஜனவரியில் 32 ஆயிரத்து 405 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.52,075 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் துறையில் நிகழாண்டு ஜனவரியில் 32 ஆயிரத்து 405 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.52,075 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே முதலீடுகளை மிக அதிகளவில் ஈா்க்கும் மாநிலமாக தமிழகம் தொடா்ந்து விளங்கி வருகிறது. உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் கையெழுத்தான முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தியுள்ளது.

நிகழாண்டு ஜனவரியில் 32 ஆயிரத்து 405 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.52,075 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்திலேயே மிகப்பெரிய தனிப்பட்ட முதலீடாக, குவைத் நாட்டைச் சாா்ந்த ‘அல் கெப்லா அல் வட்யா’ குழுமம், தூத்துக்குடி அருகில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப் பொருள்கள் தயாரிப்பு வளாகத்தை ரூ.49 ஆயிரம் கோடியில் அமைக்கும்.

இந்த முதலீடு அதைச் சாா்ந்த உபதொழில்களுக்கு குறிப்பிட்டத்தக்க பயன் அளிப்பதுடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com