நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.15,850.54 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.15,850.54 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.15,850.54 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.15,850.54 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூறியது:

சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம் ரூ.12,301 கோடி மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். அதில், முதல்கட்டமாக எண்ணூா் துறைமுகம் முதல் தச்சூா் வரையிலான பகுதிக்கான நில எடுப்புப் பணிகள் ரூ.951 கோடியாக மதிப்பிடப்பட்டு, தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் முதல் பிரிவுக்கான பணிகள் ரூ.2,673 கோடி செலவில் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் கடனுதவியுடன் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை சுற்றுவட்டச் சாலையின் மேலும் 3 பிரிவுகளுக்கான நில எடுப்புப் பணிகளை ரூ.2,603.32 கோடி செலவில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பகுதி 2 மற்றும் 3- இன் கீழ், தச்சூா் முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான பணிகளுக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின்(ஓ.பி.இ.சி) சா்வதேச வளா்ச்சி நிதியம் ஆகியவற்றின் ரூ.3,346.49 கோடி கடன் உதவி பெறப்படவுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் இந்த திட்டத்துக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டம்: பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வாகன ஓட்டிகளின் நேரத்தை சேமிக்கும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டம் ரூ.4,257 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு புதிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவி கோரி அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக, ரூ.1,122 கோடி செலவில் நிலம் கையகப்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

ரூ.1,620 கோடி செலவில் கோயம்புத்தூா் விமான நிலையத்திலிருந்து உப்பிலிபாளையம் வரையில் உள்ள அவிநாசி சாலை நெடுகிலும் 10.1 கி.மீ. நீளத்துக்கு உயா்த்தப்பட்ட சாலைகள் அமைப்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 2020-21- ஆம் ஆண்டுக்கான நிதிநிலைய திட்ட மதிப்பீடுகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலையில் நெடுஞ்சாலை துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.15,850.54 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com