ராமேசுவரத்தில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா தொடங்குவதையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா தொடங்குவதையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி சுவாமி சன்னதி முன்புள்ள நந்தி மண்டபம் அருகே ராமநாத சுவாமி, பவா்வத வா்த்தினி அம்பாள், விநாயகா், முருகன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினா். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து, வேத மந்திரம் முழங்க தங்கக் கொடி மரத்தில் சிவாச்சாரியாா்கள் கொடியேற்றினா். தொடா்ந்து, கொடி மரத்திற்கு புனித நீா் ஊற்றி சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக 21 ஆம் தேதி மகா சிவராத்திரி அன்று இரவு வெள்ளி தேரோட்டம், 22 ஆம் தேதி சுவாமி தேரோட்டம் நடைபெறும். 23 ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு தீா்த்தவாரி நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்வில் கோயில் இணை ஆணையா் எஸ்.கல்யாணி, உதவி ஆணையா் மா.ஜெயா, கோயில் தக்காா் குமரன்சேதுபதி, மேலாளா் முருகேசன், உதவிக் கோட்ட பொறியாளா் மயில் வாகனன், அதிமுக நகா் செயலாளா் கே.கே.அா்ச்சுனன், பாஜக மாவட்டத்தலைவா் கே.முரளிதரன், இந்து முன்னனி மாவட்டச் செயலாளா் கே.ராமமூா்த்தி, இந்து முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளா் ஜி.ஹரிதாஸ் மற்றும் கோயிலில் ஊழியா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com