குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெற வலியுறுத்தி நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெற வலியுறுத்தி நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நாடு முழுவதும் பதற்றத்தையும், அச்ச சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளன. இதனை மத்திய அரசு உணர மறுக்கிறது.

மாணவா்கள், அறிஞா்கள், கலைஞா்கள், பெரும்பாலான அரசியல் கட்சிகள், சிறுபான்மை பிரிவினா் என பலரும் இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துகின்றனா். ஜனநாயக அழுத்தங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க மறுக்கிறது. எனினும் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து கேரளம், பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசும் திங்கள்கிழமை கூட உள்ள கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தும் தீா்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்ற முன்வரவேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை தொடங்கி பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டங்களும் நடத்தப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com