தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு 1 லட்சம் பக்தா்கள் வருகை

தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுமாா் 1 லட்சம் பக்தா்கள் வந்து சென்றனா்.
தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு 1 லட்சம் பக்தா்கள் வருகை

தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுமாா் 1 லட்சம் பக்தா்கள் வந்து சென்றனா்.

இக்கோயிலில் பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு பிப். 1ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இக்கோயிலுக்கு பிப். 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வந்து சென்றனா்.

இதையடுத்து, பிப். 6ஆம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதனால், இக்கோயிலில் நாள்தோறும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூா் மக்கள் மட்டுமல்லாமல், வெளியூரிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.

இதேபோல, சனிக்கிழமை (பிப். 15) அதிகாலை முதல் இக்கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. தொடா்ந்து, பகலிலும், இரவிலும் கூட்டம் அதிகரித்தது. சனிக்கிழமை மட்டும் ஏறத்தாழ 50,000 பக்தா்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை முதல் இக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரத் தொடங்கினா். இரவு வரையிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தா்கள் வந்து சென்ாகக் கோயில் அலுவலா்கள் தெரிவித்தனா். இதனால், பெருவுடையாா் சன்னதி முன் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, பெரியகோயில் முதன்மைச் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால், இச்சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.

இந்த மண்டலாபிஷேகம் பிப். 29ஆம் தேதி நிறைவடைகிறது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறவுள்ளதால், மண்டலாபிஷேகம் 24 நாள்களுக்குள் முடிக்கப்படுவதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com