"தெளிவு கிடைத்தது'

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியினைப் பெறும் வழிமுறைகளைப் புரிந்துகொள்ள... 
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

முத்துப்பிரியா மணிவேல் (22), நவநாரி ஊராட்சி - குண்டடம் ஒன்றியம்: கோவையில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பாராட்டு விழா, வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கிடைக்கப்பெற்ற சிறந்த யோசனைகளும், வழிகாட்டுதலும் கிராமங்கள் வளர்ச்சியடையவும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழிவகுக்கும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியினைப் பெறும் வழிமுறைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.

-------------------------------------------

செல்வி கனகராஜ் (45), மணக்கடவு ஊராட்சி - தாராபுரம் ஒன்றியம்: இந்த விழாவில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் வசதிகளை செய்து தருவதில், ஊராட்சித் தலைவர்களின் திறமையான செயல்பாடு குறித்தும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

--------------------------------------------

கோமதி செல்வகுமார் (35), பட்டணம் ஊராட்சி - சூலூர் ஒன்றியம்: நான், கடந்த 2008ஆம் ஆண்டில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, மத்திய அரசால் சுகாதாரத்துக்காக வழங்கப்படும் நிர்மல் புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளேன்.
 அரசின் திட்டங்களைத் துரிதமாகச் செயல்படுத்தும் வழிகளையும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசியது மூலமாக அறிந்து கொண்டேன்.

----------------------------------------------

செல்வி ரமேஷ் (33), கவுண்டச்சேரிபுதூர் ஊராட்சி - தாராபுரம் ஒன்றியம்: தாராபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டும் பணியாற்றிக் கொண்டிருந்த நான், மகளிருக்காக ஒதுக்கப்பட்ட எங்கள் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். முதல் முறையாகப் இந்தப் பொறுப்பு வகிப்பதால், ஊராட்சி நிர்வாகம் குறித்து பல சந்தேகங்கள் எனக்கு இருந்தன. இந்த விழாவில் அறிவியலாளர் பொன்ராஜ் அளித்த விளக்கங்களும், ஆலோசனைகளும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாக இருந்தன.

-----------------------------------------------------------

மு.சபரிநித்யா, ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி, பொள்ளாச்சி (தெற்கு) ஒன்றியம்: ஊராட்சித் தலைவர்களின் அதிகாரங்கள், பொறுப்புகள், கடமைகள் குறித்த முழுமையான தெளிவு இக்கருத்தரங்கின் மூலம் கிடைத்தது. புதிதாக ஊராட்சித் தலைவராக பதவியேற்றுள்ள என் போன்றவர்களுக்கு இக்கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

---------------------------------------------------------------

ப.ஈஸ்வரன், சடையபாளையம் ஊராட்சி, குண்டடம் ஒன்றியம்: இக்கருத்தரங்கு மூலம் ஊராட்சி நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்தி, எனது ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக கொண்டுவர வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்துள்ளது.

--------------------------------------------------------------

கா.சிவகுமார், அக்கரை கொடிவேரி ஊராட்சி, தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம்: மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் கிராமசபைக் கூட்டத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சிகளின் நிதி ஆதாரங்களைப் பெருக்குதல், இதற்கான திட்டங்களை வகுத்தல், மற்ற துறைகளைப் பயன்படுத்தும் விதங்கள் குறித்து தெரிந்துகொண்டேன்.

--------------------------------------------------------------

ஏ.அன்பழகன், தேவனாம்பாளையம் ஊராட்சி, கிணத்துக்கடவு ஒன்றியம்: மூன்று முறை சிறந்த ஊராட்சிக்கான நிர்மல் புரஸ்கார் விருது பெற்றுள்ளேன். இந்தக் கருத்தரங்கில் பல புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். இதன்மூலம் எதிர்காலத்தில் மேலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------

தேவகி சம்பத்குமார், தொரவலூர் ஊராட்சி, திருப்பூர் ஒன்றியம்: நான் முதல்முறையாக ஊராட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த கருத்தரங்கின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஊராட்சி வருவாயை அதிகரிப்பது குறித்த பல புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். தினமணி இதுபோன்ற பயனுள்ள கருத்தரங்குகளை விரிவாக நடத்த வேண்டும்.

-------------------------------------------------------------------------
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com