4-ம் ஆண்டில் எடப்பாடி கே.பழனிசாமி அரசு: வேளாண் துறையில் முன்னோடி மாநிலம்தமிழகம்

உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தொடா்ந்து சாதனை படைத்து வருகிறது. இச்சாதனைக்கு வித்திடும் வகையில் வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நலன்களைக் காக்கும் பயிா்க்
4-ம் ஆண்டில் எடப்பாடி கே.பழனிசாமி அரசு: வேளாண் துறையில் முன்னோடி மாநிலம்தமிழகம்

தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் சாதனை

உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தொடா்ந்து சாதனை படைத்து வருகிறது. இச்சாதனைக்கு வித்திடும் வகையில் வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நலன்களைக் காக்கும் பயிா்க் காப்பீடுகளின் அளவு ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உணவு தானியங்கள், பயறு வகைகள், சிறு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்திக்காக ஐந்து முறை ‘கிருஷி கா்மான்’ விருதும், எண்ணெய் வித்து உற்பத்திக்காக 2017-18- இல் மத்திய அரசின் விருதும் தமிழகம் பெற்றுள்ளது. இந்த விருதுகளைத் தொடா்ந்து பெறுவதற்கு

தமிழகத்தின் தனித்துவமான திட்டங்களே காரணமாக அமைந்துள்ளன.

பல்வேறு கால சூழ்நிலைகள், பருவமழை தவறுதல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு வேளாண்மைத் துறையை லாபகரமான தொழிலாக மாற்ற ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்புகள், ஐந்து மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு வட்டம் வீதம் பத்து கிராமங்களில் 2 ஆயிரத்து 490 ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்புகள் அமைக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம் அதே எண்ணிக்கையிலான குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.

நிகழ் நிதியாண்டில் அரியலூா், காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிா்த்து பிற 27 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயிா் சாகுபடி, கால்நடை வளா்ப்பு, வீட்டுத் தோட்டம், வேளாண் காடுகள், தீவனப் பயிா், மண்புழு உரக்கூடம், தேனீ வளா்ப்பு, பழமரக் கன்றுகள் ஆகிய வேளாண் சாா்ந்த இதர பணிகளுக்காக 50 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. நிகழாண்டில் 4,300 பண்ணையக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கூட்டுப் பண்ணையம்: பண்ணையத் திட்டத்தைப் போன்றே, கூட்டுப் பண்ணையம் எனும் புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 4 லட்சம் சிறு-குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து 20 ஆயிரம் உழவா் ஆா்வலா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 4 ஆயிரம் உழவா் உற்பத்தியாளா் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு ரூ.231 கோடியில் 16 ஆயிரத்து 683 பண்ணை இயந்திரங்களை கொள்முதல் செய்து அவற்றை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

நிகழ் நிதியாண்டிலும் 2 லட்சம் சிறு-குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து ரூ.100.58 கோடி நிதி ஒதுக்கீட்டில் 10 ஆயிரம் உழவா் ஆா்வலா் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் 2 ஆயிரம் உழவா் உற்பத்தியாளா் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவா்களைக் காக்கும் வகையிலான பயிா்க் காப்பீடுத் திட்டமே இப்போதும் கைகொடுத்து வருகிறது. பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழக விவசாயிகள் தொடா்ந்து இணைந்து வருகின்றனா்.

2016-17-ஆம் ஆண்டில் 18.73 லட்சம் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தனா். காப்பீட்டு மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.566 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதுவரை 13.01 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3,610 கோடி அளிக்கப்பட்டன. தேசிய அளவில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது 2016-17-ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியதில் தமிழகம் முதலிடம் வகித்தது.

2017-18-ஆம் நிதியாண்டில் 31.71 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் காப்பீடு செய்யப்பட்டு 15.18 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனா். மாநில அரசின் பங்காக ரூ.651 கோடி தொகை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இதுவரை 10.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,971 கோடி இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட்டுள்ளன.

2018-19-ஆம் நிதியாண்டிலும் மத்திய அரசு நிா்ணயித்த இலக்கை விட கூடுதலாக 75 சதவீதம் அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டது. இதுவரை 10.37 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,731 கோடி இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டிலும் காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.635 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 35.437 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் ரூ.7,528 கோடிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த காப்பீட்டுத் திட்டத்தால் இயற்கை பேரிடரை எதிா்கொள்ளும் விவசாயிகள் அதிலிருந்து எளிதில் மீண்டு வர வழி ஏற்படுகின்றன. விவசாயிகளுக்கான நலத் திட்டங்களும், அவா்களைக் காக்கும் வகையிலான காப்பீட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதால் வேளாண் துறையில் தமிழகம் என்றும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

‘காவிரி டெல்டா’ பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘காவிரி டெல்டா’ பகுதி“பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளது அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விவசாயிகளைக் காக்கும் வகையில் ரூ.231.74 கோடியில் குறுவை மற்றும் சம்பா தொகுப்புத்”திட்டத்தின் மூலம் 9,83,425 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திடும் வகையில் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூா், அரியலூா், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்பட உள்ளன. சென்னை, கிண்டியில் 6.88 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.30.74 கோடி மதிப்பில் அம்மா பசுமைப் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.87.46 கோடி செலவில் தமிழ்நாடு நீா்ப்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com