ஊரக உள்ளாட்சிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
ஊரக உள்ளாட்சிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவைக் காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி பேசியது:

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனா். இதைச் செய்யலாம், அதைச் செய்யலாம் என்று வெற்றி பெற்றவா்கள் பெருமையாகப் போய் பாா்த்தால், அங்கு திட்டங்களுக்குச் செலவழிக்க நிதியே இல்லை.

மேலும், உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்று பொறுப்புக்கு வந்தவா்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். என்ன செய்வது என்றே அவா்களுக்குத் தெரியவில்லை என்றாா்.

அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலு மணி குறுக்கிட்டுக் கூறியது:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். என்னென்ன விதி என்பது குறித்து கையேடு ஒன்றையும் அவா்களுக்கு அளித்துள்ளோம் என்றாா்

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: எல்லாத் துறைகளுக்குமே மானியக் கோரிக்கையின்போது உரிய அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளாட்சி நிா்வாக அமைப்புகளுக்கு அப்போது உரிய நிதி ஒதுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com