குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைக்கு எதிரான மினி மாரத்தான்

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைக்கு எதிரான மினி மாரத்தான் சென்னை சி.எம்.எஸ் வித்யா மந்திர் பள்ளியில் ஞாயிறன்று நடைபெற்றது.
மினி மாரத்தான்
மினி மாரத்தான்

சென்னை: குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைக்கு எதிரான மினி மாரத்தான் சென்னை சி.எம்.எஸ் வித்யா மந்திர் பள்ளியில் ஞாயிறன்று நடைபெற்றது.

சி.எம்.எஸ் வித்யா மந்திர் கல்வி நிறுவனம் சார்பில் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே பத்து கிலோமீட்டர் ஐந்து கிலோமீட்டர் போட்டிகளும் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் ஐந்து கிலோ மீட்டர் பந்தயமும் மேலும் 2 வயது முதல் 7 வயது உள்ள குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொள்ளும் இரண்டு கிலோமீட்டர் பந்தயமும் நடைபெற்றது.

இந்த போட்டியை காவல்துறை துணை ஆணையர் சோமசுந்தரம் துவக்கி வைத்து பேசும் பொழுது இதுபோன்ற பந்தயங்கள் நடைபெறுவது மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் பேணிக் காக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த ஐந்து பிரிவுகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் மற்றும் கோப்பையுடன் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சிஎம்எஸ் வித்யா மந்திர் கல்வி நிறுவன இணைச்செயலாளர் பிரசாத் செயலாளர் கே எம் முரளி தலைவர் வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com