கோவை அருகே ஜல்லிக்கட்டு போட்டிகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்
கோவை ஜல்லிக்கட்டு
கோவை ஜல்லிக்கட்டு

கோவை: கோவை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே கோவை ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து இப்போட்டிகளை நடத்தின. இந்நிகழ்ச்சியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் 900 மாடுகளும், 820 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் மாடுகளும் இப்போட்டியில் களமிறங்கின. காளைகளை அடக்கும் காளையர்களுக்கும், அடக்க முடியாத காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com