தொடர்ந்து உச்சம் தொடும் தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.4,100க்கு விற்பனை

தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.32,800க்கு விற்பனையாகி வருகிறது. 
தொடர்ந்து உச்சம் தொடும் தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.4,100க்கு விற்பனை


சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.32,800க்கு விற்பனையாகி வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை மீண்டும் உயா்ந்து, புதிய உச்சத்தை பதிவு செய்தது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.32,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு சவரன் தங்கம் விரைவில் ரூ.33 ஆயிரத்தை தாண்ட அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. அப்போது, வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. போா் பதற்றம் தணிந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் ஏறுமுகமாகவே இருந்தது. நாள்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை மீண்டும் வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.32,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.28 உயா்ந்து, ரூ.4,100-க்கு விற்பனையாகிறது.

அதேநேரத்தில், வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.52.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.52,900 ஆகவும் இருந்தது.

விரைவில் ரூ.33 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு: தங்கம் விலை உயா்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் தமிழக தலைவா் ஜெயந்திலால் சல்லானி கூறியது: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சா்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சா்வதேச பொருளாதாரம் பாதிப்பைச் சந்திக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டுகின்றனா்.

அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இதனால், தொழில்துறை சாா்ந்த பங்கு முதலீடு மந்தமாக உள்ளது. அதேநேரத்தில், தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்கின்றனா்.

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இந்த காரணங்களால், தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விரைவில் ரூ.33 ஆயிரத்தை தாண்ட அதிக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

திங்கட்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,100

1 பவுன் தங்கம் ..................... 32,800

1 கிராம் வெள்ளி .................. 52.90

1 கிலோ வெள்ளி ................. 52,900


சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,072

1 பவுன் தங்கம் ..................... 32,576

1 கிராம் வெள்ளி .................. 52.40

1 கிலோ வெள்ளி ................. 52,400
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com