அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? கவிஞர் வைரமுத்து கேள்வி

அச்சப்படும் சிறுபான்மை இனமக்களுக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்
அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? கவிஞர் வைரமுத்து கேள்வி

அச்சப்படும் சிறுபான்மை இனமக்களுக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு திடீரென சாலை மறியல் தொடங்கியது. சுமார் 500 பெண்கள் பங்கேற்ற இப்போராட்டத்துக்கு பதிலடி தரும் வகையில் ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவுப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இந்தப் பகுதியில் திங்கள்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இது ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளுக்கு பரவியது. கிழக்கு தில்லியில் திங்கள்கிழமை இரவுக்குப் பிறகு சந்த் பாக், பஜன்புரா, கோகுல்புரி, மெளஜ்பூர், கர்டாம்புரி, ஜாஃப்ராபாத் உள்ளிட்ட இடங்களில் தெருக்களில் இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

வன்முறையாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன் கடைகளைச் சூறையாடினர், வீடுகளுக்கும் தீவைத்தனர். வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடும் நிகழ்த்தினர். வடகிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறிய வன்முறைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டரில், எதிராக வாக்களித்தவர்க்கும் 
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com