மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவது தொடர்பாக தேமுதிகவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவது தொடர்பாக தேமுதிகவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவது தொடர்பாக தேமுதிகவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் கிடைக்கும்.

இந்நிலையில், அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை கோரி வருகிறது. இந்தச் சூழலில், முதல்வா் பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் தேமுதிக துணைச் செயலா் எல்.கே.சுதீஷ் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். 

அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி தரவேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால், இதுதொடா்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலங்களவை எம்பி பதவி வழக்குவது தொடர்பாக தேமுதிகவுடன் எந்த ஒப்பதமும் செய்யவில்லை. 

பாமகவுடன் மட்டுமே அதிமுக ஒப்பந்தம் செய்தது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழக்குவது தொடர்பாக கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். இது கட்சியின் கொள்கை முடிவு, தனி நபர் முடிவு அல்ல. ரஜினி-கமல் கூட்டணி குறித்து திமுகதான் கவலைப்பட வேண்டும், அதிமுகவுக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com