பெரம்பலூர் மாவட்டத்தை கைப்பற்றியது திமுக

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும், 3 ஒன்றியக்குழுத் தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியது. ஆலத்தூர் ஒன்றியத்தில் திமுகவும், அதிமுகவும் சம பலமாக உள்ளதால் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.  

வெற்றி நிலவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி - 8

திமுக- 7
அதிமுக- 1

ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிடங்கள் 76 

பெரம்பலூர் ஒன்றியம் -14

திமுக- 9
அதிமுக -3
தேமுதிக- 1
அமமுக - 1

வேப்பூர் ஒன்றியம் - 23

திமுக -10
அதிமுக- 6
பாமக- 3
விசிக.-1
ஐஜேகே -1
சுயட்சை -2

வேப்பந்தட்டை ஒன்றியம் -21

திமுக -10
அதிமுக -4
பாமக- 2
விசிக- 1
ஐஜேகே - 1
சுயேட்சை- 3

ஆலத்தூர் ஒன்றியம் -18

திமுக- 9
அதிமுக- 8
தேமுதிக- 1

நான்கு ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்த வெற்றி விவரம்:

திமுக- 38
அதிமுக- 21
பாமக- 5
விசிக- 2
தேமுதிக- 2
ஐஜேகே -2
அமமுக-1
சுயட்சை- 5  

இதில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை திமுக கைப்பற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியக்குழு தலைவர் பதவியிடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள 18 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் திமுக 9 இடங்களையும், அதிமுக 8 இடங்களையும், கூட்டணியில் உள்ள தேமுதிக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. இதனால், திமுகவும், அதிமுகவும் சம பலத்தில் உள்ளதால் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிப்பதில் இழுபறியான நிலை நீடித்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com