வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள்: மாநிலத் தேர்தல் ஆணையரிடம் திமுக மீண்டும் புகார்

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நீடிப்பதாக திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். 
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள்: மாநிலத் தேர்தல் ஆணையரிடம் திமுக மீண்டும் புகார்

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நீடிப்பதாக திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். 

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை தொடங்கி நள்ளிரவுக்குப் பிறகும் நீடித்தது. இறுதி முடிவுகள் வெள்ளிக்கிழமைதான் தெரியும் என மாநிலத் தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி தெரிவித்தார். கட்சிகள் சார்பில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி இடங்களில் அதிமுகவும் திமுகவும் மாறி, மாறி முன்னிலை வகித்து வருகின்றன. 

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியை, நேரில் சந்தித்து திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு இன்று புகார் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்ளாட்சித்தேர்தல் முறைகேடுகளை முழு ஆதாரங்களோடு சேகரித்துள்ளோம். தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேற்றிரவு திமுக தலைவர் புகார் அளித்தார். புகாருக்குப் பிறகும் தவறாக முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 

புகார், கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக்கூடாது. திமுக தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். கழக தலைவர் ஒவ்வொரு நிகழ்வையும் நுணுக்கமாக அணுகுகிறார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை விட 10 மடங்கு அதிகமாக ஸ்டாலின் கட்சியை திறம்பட வழிநடத்துகிறார். 

அனைத்து தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com