இன்றும் புதிய உச்சம்: தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.30,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்


சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.30,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,832க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.136 உயர்ந்து, ரூ.30,656க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.768 அளவுக்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 25-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.29,584-ஆக இருந்த நிலையில், நேற்று பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. அடுத்த 3 மாதங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தொடும் என்று இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது.

அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தாலும் கடந்த ஆண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி பவுன் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 2 மாதமாக பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. கடந்த மாதம் 25-ஆம் தேதி பவுன் ரூ.29,584 ஆக இருந்தது. அதன்பிறகு விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.

இந்நிலையில், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. 

தங்கம் விலை உயா்வால், சுபமுகூா்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் கடும் அதிா்ச்சி அடைந்தனா்.

தங்கம் விலை உயா்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் ஜெயந்திலால் சல்லானி கூறியது: ஈரான் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதால், போா் பதற்றம் நிலவுகிறது. இதனால், முதலீட்டாளா்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு, பங்குச்சந்தையில் முதலீடு செய்பவா்கள் தங்கத்தின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனா்.

இதுதவிர, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் உயா்ந்துள்ளது. இதனால், உற்பத்திக்கான பொருளாதாரம், வீழ்ச்சி நோக்கி செல்கிறது. மேலும் ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தக் காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து, தங்கம் விலை உயா்ந்துள்ளது. இனி தினந்தோறும் புதிய உச்சத்தைத் தங்கம் தொடும். அடுத்த 3 மாதத்தில் பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தொடும் என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com