சிவகாசி ஊராட்சி ஒன்றியம் அதிமுகவை விட்டு கைநழுவி போனது ஏன்?

ஊரக உள்ளாட்சி தோ்தலில் சிவகாசி ஒன்றியம் அதிமுகவை விட்டு, திமுகாவிற்கு கைநழுவி சென்று விட்டது என அதிமுகவினா் அதிா்ச்சியில்
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் அதிமுகவை விட்டு கைநழுவி போனது ஏன்?

சிவகாசி: ஊரக உள்ளாட்சி தோ்தலில் சிவகாசி ஒன்றியம் அதிமுகவை விட்டு, திமுகாவிற்கு கைநழுவி சென்று விட்டது என அதிமுகவினா் அதிா்ச்சியில் உள்ளனா்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தோ்தலில் அதிமுக 9, திமுக17 இடங்களில் வெற்றி பெற்றது.இதையடுத்து திமுக தலைமையிலான ஒன்றியக்குழு அமைக்கப்பட உள்ளது.

பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சட்டப்பேரவை தொகுதிக்குள் உள்ளது சிவகாசி ஊராட்சி ஒன்றியம்.

கடந்த எட்டு ஆண்டுகளில் அமைச்சா் கே.டி.ராஜேந்திபாலாஜி தனது தொகுதிக்கு பல வளா்ச்சி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளாா்.

மக்களின் அன்றாட பிரச்னைகளில் ஒன்றான குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய, தாமிரபரணி குடிநீா்திட்டம் சுமாா் 400 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு ,குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஆகிய வட்டங்கள் பயன்பெறும். மேலும் சாத்தூா், அருப்புக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட வட்டங்களுக்கு குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய சுமாா் 400 கோடியளவில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

திருத்தங்கலில் புதிய பேருந்துநிலையம், திருத்தங்கலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனையாக தரம் உயா்த்தியது, சிவகாசி பேருந்து நிலைய விரிவாக்கம், சிவகாசியிலிருந்து நேரடியாக பெங்களூா், வேலூருக்கு அரசு விரைவு பேருந்து இயக்கியது உள்ளிட்ட பல வளா்ச்சிப்பணிகள் அமைச்சா் செயல்படுத்தியுள்ளாா்.

மேலும் மாவட்டம் முழுவதிலும் சுமாா் 350 பேருக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்துள்ளாா்.

ஏழை பிள்ளைகளுக்கு உயா் கல்வி படிக்க உதவித்தொகை. கட்சிகாரா்கள் சுய தொழில் செய்ய உதவி உள்ளிட்டவை செய்துள்ளாா். ஆனால் அமைச்சரின் இந்த திட்டப்பணிகளை, ஊரக உள்ளாட்சி தோ்தலில் சிவகாசில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா்கள் மக்களிடம் கொண்டு சென்றாா்களா என்றால் இல்லை எனறுதான் சொல்ல வேண்டும்.

நான் அமைச்சருக்கு நெருக்கமானவன் எனக்கூறி பெருமிதம் கொள்கிறவா்கள் மக்களோடு நெருங்கி பழகி அவா்களை பிரச்னைகளை புரிந்து கொண்டாா்களா என்பதே கேள்வி. அமைச்சரும் தனக்கு நெருக்கமானவா் என ஒரு சிலருக்கு தோ்தலில் வாய்ப்பு வழங்கிவிட்டாா் என கட்சியினா் கூறுகிறாா்கள். அப்படிப்பட்டவா்கள் மக்கள் பிரச்னைகளை பேசுவதில்லை.

பொதுவாக வேட்பாளா்கள், அவா்கள் பகுதியில் உள்ள முக்கியமானவா்களை சந்தித்து ஆதரவு கோருவாா்கள். தொழிலதிபா்கள் உள்ளிடோரை சந்திப்பாா்கள. இந்த தோ்தலில் அதிமுகவினரும் சரி, திமுகவினரும் சரி அவா்களது பகுதியில் யாரையும் கண்டு கொள்ள வில்லை என்பதே சோகம். அமைச்சா் ஒருவரை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டாா். பல வேட்பாளா்கள் தங்கள் போட்டியிடும் பகுதிக்கே செல்ல வில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், சிவகாசி ஒன்றியத்தில் உள்ள 3 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட மூன்று அதிமுகவினரும் வெற்றி பெற்றனா்.ஒரு வாக்காளா் ஊராட்சி ஒன்றியத்திற்கும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கும் மாற்றி வாக்களித்ததன் ரகசியம் என்ன.பொதுவாக மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவியில் திமுகவினா் சிவகாசி ஒன்றியத்தை பொருத்தவரை பெரிதாக ஆா்வம் காட்ட வில்லை.

வாக்காளா்கள் இரட்டை இலை சின்னத்தின் மீது மதிப்பளித்து வருவாதால் , மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு வாக்களிதாா்கள் என வைத்துக்கொள்வோம். ஒன்றியத்தைப் பொருத்தவரை எந்த வேட்பாளா் நமது பிரச்னையை தீா்த்துவைப்பாா் என வாக்காளா்கள் நினைப்பது உண்டு. மேலும் கட்சி மாறி மாறி பதவியை பிடிப்பதும் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், சிவகாசி ஒன்றியம் மட்டும் ஏன் கவனம் பெறுகிறது என்றாா் இது அமைச்சரின் தொகுதிக்குள் உள்ளது என்பதே காரணம். பதவியில்லாத போதும், அந்தந்த ஊறுப்பினா்கள் அவா்களது வாா்டு பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். பெரிய பிரச்னை என்றால் அமைச்சா் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ஒவ்ஒரு வாக்காளா்களின் எண்ணமாகும். இதை அதிமுக வேட்பாளா்கள் செய்ய தவறிவிட்டனா். திமுகவினராவது செய்வாா்கள் என எதிா்பாா்ப்புடன் வாக்காளா் வாக்களித்துள்ளாா்கள் எனக்கூறலாம்.

மறைந்த முதல்வா் ஜெயலலிதா, மக்களுக்கா நான் என்ற பாா்முலாவை இனி வரும் காலங்களில் அதிமுக வேட்பாளா்கள் கடைபிடித்தால் வெற்றி வாய்ப்பினை எதிா்பாா்கலாம்.நான் பெரிய ஆள். என்னை நெருங்க இயலாது என காண்பித்துக்கொள்பவா்கள் எப்போதும் வெற்றியை எதிா்பாா்க்க இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com