ஓ எல் எக்ஸ் மூலம் ஏமாற்றிய போலி இராணுவ வீரர்: ஆன்லைன் மூலம் ஏமாந்து தவிக்கும் இளைஞர்

ஆன்லைன் விற்பனை தளமான ஓ எல் எக்ஸ் மூலம் பைக் தருவதாக போலி இராணுவ வீரர் ஒருவரிடம் தூத்துக்குடி இளைஞர் ஏமாந்துள்ளாள் சம்பவம் நடந்துள்ளது.
போலி இராணுவ வீரர்
போலி இராணுவ வீரர்

ஸ்ரீவைகுண்டம்: ஆன்லைன் விற்பனை தளமான ஓ எல் எக்ஸ் மூலம் பைக் தருவதாக போலி இராணுவ வீரர் ஒருவரிடம் தூத்துக்குடி இளைஞர் ஏமாந்துள்ளாள் சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி ஓஎல்எக்ஸ் மூலம் ஒரு பைக் தேர்வு செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த பிரமில் குமார் என்பவரிடம் முருகானந்தம் பைக் கேட்டு பேசியுள்ளார். அவர் தான் சென்னை பல்லாவரம் இராணுவப்படை முகாமில் பணி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.  அதன்பின்னர் இறுதி பேச்சுவார்த்தையில் 28 ஆயிரம் ரூபாய்க்கு இராணுவ வீரரின் இருசக்கர வாகனத்தை வாங்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

அதற்காக முதற்கட்டமாக கொரியரில் வாகனத்தை அனுப்புவதற்கு  பிரமில்குமார் கொரியர் அனுப்புவதற்கு முதலில் 3,100 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முருகானந்தமும் 4ம் தேதி  ஆன்லைன் மூலமாக அனுப்பியுள்ளார்.  அதன்பின்னர் மீண்டும் போன் செய்த பிரமில்குமார் பைக்கின் விலையில் 50 சதவீதம் முதலில் கட்டினால் மட்டும் தான் இராணுவப்படை லாரியில் வண்டியை கொரியர் அனுப்பமுடியும் என்று கூறியதாக கூறியுள்ளார்.

அதன்பின்னர் முருகானந்தம் 12500 ரூபாயை மறுபடியும் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் பிரமில்குமார் பின்னர் முழுத்தொகையையும் செலுத்தினால் மட்டுமே வாகனத்தை அவர்கள் கொரியர் அனுப்பமுடியும் என்று தெரிவித்துள்ளார்.  வேறு வழியில்லாமல் முருகானந்தமும் முழுத்தொகையும் ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த பிரமில் குமார் நீங்கள் பணத்தை தாமதமாக கட்டிவிட்டீர்கள் எனவும் அதற்கு தாமதக்கட்டணமாக 11,250 ஆயிரம் ரூபாய் கட்டினால் தான் பைக் தருவார்கள் என தெரிவித்து விட்டார். முருகானந்தமும் முழுத்தொகையும், தாமதக்கட்டணத்தையும் சேர்த்து 39,350 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு முருகனாந்தம் போன் செய்துள்ளார். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

மேலும் அவர் கொடுத்த இராணுவ விலாசத்தை வைத்து நேரில் சென்று விசாரிக்க சென்றுள்ளார். ஆனால் அப்படி ஒரு நபர் அங்கு பணிபுரியவில்லை என்று அவர்கள் தெரிவித்து விட்டனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த முருகானந்தம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.  ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்னர் சென்னை ஓட்டேரி காவல்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று கூறினார்.

ஆனால் அவர்கள் தொலைவு தூரமாக உள்ளதாலும், பணம் அனுப்பிய வங்கி உள்ள பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். முருகானந்தமும் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு வந்து புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களும்  புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.  எனவே அவர் தற்போது தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com