விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி கால்கோள் விழா: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

விராலிமலையில் வரும் ஜனவரி 19ல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி கால்கோள் விழா: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

விராலிமலையில் வரும் ஜனவரி 19ல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை பட்டமரத்தான் கோயில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் நிர்வாகக் குழுவால் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று களமாடின. மேலும், சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு கார், புல்லட், பைக், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இதனால் இந்த ஆண்டும் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நிகழாண்டு ஜன.19ம் தேதி நடைபெறும் இப்போட்டியின் தொடக்கத்திற்கான கால்கோள் விழா, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் பட்டமரத்தான் கோயில் திடலில் நடைபெற்றது. 

இதில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் எஸ்.பழனியாண்டி, மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.கே.சிவசாமி, விராலிமலை ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ரவி, கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெ.ஆர்.அய்யப்பன், தொழிலதிபர் ஆர்.பி.ராமச்திரன், எம்.முரளிதரன், நிர்வாகக்குழு தலைவர் பி.அருண்பாண்டியன, எல்.ராஜேஸ்கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com