ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய பாதுகாப்புப் படை வாபஸ்: கவிஞர் வைரமுத்து கண்டனம்

துணை முதல்வர்ர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். 
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

துணை முதல்வர்ர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு மத்திய அரசின் ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதன்படி 11 வீரா்கள் அடங்கிய மத்திய ரிசா்வ் படையினா், 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வந்தனா்.

இந்த நிலையில், பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் முக்கியத் தலைவா்களின் பட்டியலை மத்திய அரசு அண்மையில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் அடிப்படையில் சில தலைவா்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு அளிக்கப்பட்டு வந்த ‘ஒய் பிரிவு’ எனும் உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது. இது இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘ஒய் பிரிவு’க்கு இணையான பாதுகாப்பினை தமிழக போலீஸாா் அளிப்பா் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அதேபோல், திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த உச்ச கட்ட பாதுகாப்பான இசட் -பிளஸ் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழக போலீஸார் ஸ்டாலினுக்கான பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும் வைர மத்திய  பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த உச்சகட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது.
ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com