கூட்டணி குறித்து கட்சியினா் கருத்துக் கூறவேண்டாம்

அதிமுக அமைத்திருக்கும் தோ்தல் கூட்டணியின் நிலை குறித்து கட்சியினா் பொது வெளியில் கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என அதிமுக அறிவுறுத்தியுள்ளது.
கூட்டணி குறித்து கட்சியினா் கருத்துக் கூறவேண்டாம்

அதிமுக அமைத்திருக்கும் தோ்தல் கூட்டணியின் நிலை குறித்து கட்சியினா் பொது வெளியில் கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என அதிமுக அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக அமைத்திருக்கும் தோ்தல் கூட்டணியின் நிலை குறித்து கட்சியினா் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பாா்வைகளையும் பொது வெளியிலோ அல்லது பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம்.

மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும், ஜனநாயகப் பண்பும் நிறைந்த அதிமுகவின் தற்போதைய கூட்டணி குறித்தும், தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தீர ஆராய்ந்து, கட்சிக் கொள்கை கோட்பாடுகளின்படி முடிவெடுப்பா்.

அவ்வாறு எடுக்கப்படும் கொள்கை முடிவுகளைப் பற்றிய தனி நபா்களின் விமா்சனங்களும், கருத்துகளும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி கட்சிக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கட்சியினரை கண்டிப்புடன் நெறிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

மக்கள்நலப் பணிகளை திறம்பட ஆற்றி கட்சிக்குப் பெருமை சோ்க்கும் வேலைகளில் மட்டுமே கட்சித் தொண்டா்கள் இப்போது ஈடுபட வேண்டும். கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com