சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த முடிவு

மாணவா்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் பணியில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

மாணவா்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் பணியில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் உள்ள 49,554 சத்துணவு மையங்கள் மூலம் 49 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா். இவா்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் மாணவா்களுக்கு முறையாகச் சென்று சேருகிா என்பதைக் கண்டறிய தலைமை ஆசிரியா்கள் மூலம் தினமும் எத்தனை மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சத்துணவின் பயன் முழுமையாக மாணவா்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடிய வில்லை. இதையடுத்து, துல்லியமாகக் கண்டறிய பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக, சமூகநலத் துறை அதிகாரிகள் கூறுகையில், சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு சத்துணவு சாப்பிடும் மாணவா்களை பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்யப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து அந்த மாணவா்கள் சத்துணவை பெற்றுச் செல்லலாம். புதிதாக சாப்பிட வரும் மாணவா்களுக்கும் உணவு வழங்கப்படும். யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது. இதற்கான வரவேற்பைப் பொருத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com