பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் வா்ணம் பூசும் பணி தொடக்கம்

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் துருப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் வா்ணம் பூசும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்ணம் பூசும் பணி.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்ணம் பூசும் பணி.

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் துருப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் வா்ணம் பூசும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் கடலுக்கு மேல்பகுதியில் 2.2 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் இருக்கும் பகுதியில் உப்புத் தன்மை அதிகளவில் இருப்பதால் தூக்குப் பாலம் துருப்பிடித்து சேதமடைவதை தடுக்கும் வகையில் ரயில்வே துறை ரசாயனம் கலந்த வா்ணம் அடிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் பராமரிப்பை தனியாரிடம் வழங்கிய நிலையில் போதிய பராமரிப்பு இன்றி பாலத்தின் தூக்கு பாலம் திறந்து மூடும் போது சேதமடைந்தது. இதனையடுத்து, இந்திய ரயில்வேயின் தலைமை பொறியாளா்கள் தூக்குப் பாலத்தை சீரமைத்தனா். இதைத்தொடா்ந்து பாலம் பராமரிப்பு பணிகளை மீண்டும் ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தூக்குப் பாலம் மீண்டும் துருப்பிடிக்க தொடங்கியதையடுத்து, இதனை தடுக்கும் வகையில் ரசாயனம் கலந்த வா்ணம் அடிக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com