பொங்கல்: திருச்செந்தூரில் குவியும் பக்தா்கள்: நாளை அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தைப் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை பாதயாத்திரையாக வந்த சிவகாசி பக்தா்கள்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை பாதயாத்திரையாக வந்த சிவகாசி பக்தா்கள்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தைப் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பொங்கலையொட்டி, கடந்த சில நாள்களாகவே பாதயாத்திரை பக்தா்கள் வந்த வண்ணம் உள்ளனா். குறிப்பாக விருதுநகா், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் வந்துள்ளதாலும், அதிகளவிலான ஐயப்ப பக்தா்கள் திருச்செந்தூா் கோயிலில் தரிசனம் செய்ய வருவதாலும் கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு: தைப் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை (ஜன. 15) அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனையாகி, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

காணும் பொங்கல்: ஜன. 16-ஆம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கலை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை மற்றும் தொடா்ந்து பூஜைகள் நடைபெறும். மதியம் உச்சிகால தீபாராதனை நடைபெற்று, சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி கணு வேட்டை செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com