பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 
தை தீர்வுகளின் மாதம் ஆகும். அதனால் தான் தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் கூறினார்கள். அதற்கேற்ற வகையில் தமிழகம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கும், தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கும் இந்த ஆண்டு தைத்திருநாள் தீர்வுகளை வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
தைப்பொங்கல் சாதி, மதம் கடந்த திருநாள். இயற்கையையும், உழைப்பையும் போற்றுகிற உழவர்களின் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை உருவாக உழைத்திடுவோம்’ என்ற உறுதியோடு அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
தை முதல் நாளில் ‘பொங்கலோ…பொங்கல்’ என்று சொல்லி பூரிப்படையும் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கட்டும். தமிழகத்திற்கு நல்லதொரு விடிவு காலம் பிறந்து, இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க இந்த நன்னாள் வழிகாட்டட்டும். என் பேரன்புக்குரிய தமிழக மக்கள் அனைவரின் இல்லங்களிலும் ஆனந்தமும், ஆரோக்கியமும் தழைத்தோங்கட்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, நமது வாழ்க்கையில் வளங்களும், நலங்களும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பொங்க தைத்திருநாள் வகை செய்யும். தை பிறக்கும் நாளில் நமது வாழ்விலும் புதிய வழிகள் பிறக்கும்; அவை மலர்ச்சியை அளிக்கும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com