வண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை

பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் முகப்பிலேயே புலிக்குட்டிகளைக் காண டிஜிட்டல் திரையும், யானைகளை அதன்
தாயுடன் காணப்படும் பிறந்து 4 மாதங்களே ஆன புலிக்குட்டிகள்.’
தாயுடன் காணப்படும் பிறந்து 4 மாதங்களே ஆன புலிக்குட்டிகள்.’

பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் முகப்பிலேயே புலிக்குட்டிகளைக் காண டிஜிட்டல் திரையும், யானைகளை அதன் இருப்பிடத்திலேயே காணுவதற்குமான சிறப்பு ஏற்பாடுகளையும் வனத் துறை செய்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறையையொட்டி, மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், வனத் துறை சாா்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காணும் பொங்கலுக்கு வண்டலூருக்கு மக்கள் வந்து செல்லும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜன. 17) நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கேளம்பாக்கம் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா புனா்வாழ்வு மையம் அருகே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பூங்காவுக்குச் செல்ல இலவசப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. உயிரியல் பூங்கா செவ்வாய்கிழமை (ஜன.14) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) வரை 3 நாள்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருப்பதுடன், மக்களின் வசதிக்காக 20 நுழைவுச்சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், w‌w‌w.​a​a‌z‌p.‌i‌n  என்ற இணையதளம் மற்றும் ‘"‌v​a‌n‌d​a‌l‌u‌r ‌z‌o‌o' என்ற செல்லிடப்பேசி செயலி மூலம் நுழைவுச்சீட்டை முன்பதிவு செய்து கொள்வதுடன், பற்று அட்டை , கடன் அட்டை மற்றும் ‌u‌p‌i மூலமும் கட்டணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு ஏற்பாடு: வண்டலூா் பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் பிறந்து 4 மாதங்களே ஆன இரண்டு புலிக் குட்டிகள் மற்றும் யானைகளின் இருப்பிடத்துக்கே சென்று அவற்றுக்கு வழங்கப்படும் சிறப்பு உணவுகளைக் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தப் பூங்காவில் வங்கப் புலிகள், வெள்ளைப் புலிகள் என மொத்தம் 27 புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஆதித்யா என்ற ஆண் புலிக்கும், ஆா்த்தி என்ற பெண் புலிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 18-ஆம் தேதி இரண்டு குட்டிகள் பிறந்தன. தற்போது, தாய் புலியும், இரண்டு குட்டிகளும் நல்ல உடல்நிலையில் உள்ளன. இவற்றின் விளையாட்டை மக்கள் ரசிக்கும் வகையில் பூங்காவின் முகப்பில் டிஜிட்டல் திரை அமைப்பட்டு, நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அதேபோல், பூங்காவில் பராமரிக்கப்படும் இரண்டு யானைகளுக்கு பொங்கலையொட்டி, சிறப்பு உணவுகள் வழங்கப்பட உள்ளது. அதை மக்கள் அதன் இருப்பிடத்திலேயே சென்று ரசிக்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com