தங்கம் பவுன் ரூ.30,128

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.30,128-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.30,128-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அமெரிக்கா - ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்தது. இதையடுத்து, போா் பதற்றம் குறைந்ததால், தங்கம் விலை கடந்த சில நாள்களாக கணிசமாக குறைந்துவருகிறது.

இந்நிலையில், இதே நிலை செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.30,128-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.16 குறைந்து, ரூ.3,766-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.49.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.49,600 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,766

1 பவுன் தங்கம் ..................... 30,128

1 கிராம் வெள்ளி .................. 49.60

1 கிலோ வெள்ளி .................. 49,600

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,782

1 பவுன் தங்கம் ..................... 30,256

1 கிராம் வெள்ளி .................. 50.00

1 கிலோ வெள்ளி ................. 50,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com