நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ரூ.14 கோடியில் கூடுதல் கட்டடம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ரூ.14.60 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ரூ.14.60 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, பட்டு வளா்ச்சித் துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்‚ கழக கிளை அலுவலகம், கல்வித் துறை அலுவலகங்கள், பால்வளத் துறை, குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகம் மற்றும் உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி இயக்குநா் அலுவலகம் ஆகிய அரசுத் துறை அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

இந்த அலுவலகங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலேயே செயல்பட கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 7,122 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.14.60 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டன. இதனை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (ஜனவரி 13) திறந்து வைத்தாா்.

மேலும், திருவள்ளூா் ஆவடி, கடலூா் ஸ்ரீமுஷ்ணம், தஞ்சாவூா் கும்பகோணம் மற்றும் பாபநாசம், திருநெல்வேலி மானூா் ஆகிய இடங்களில் ரூ.12 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியா் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வட்டாட்சியா் குடியிருப்புகளையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வி.சரோஜா, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்பட உயரதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com