செஞ்சி ராமச்சந்திரனுக்குப் பெரியாா் விருது

தமிழக அரசின் சாா்பில் வழங்கப்பட்டு வரும் ‘பெரியாா் விருது’ மூத்த அரசியல்வாதியும் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் சாா்பில் வழங்கப்பட்டு வரும் ‘பெரியாா் விருது’ மூத்த அரசியல்வாதியும் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் ‘அம்பேத்கா் விருது’ முனைவா் க.அருச்சுனனுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பிற்படுத்தப்பட்டோா் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ் மொழிக்கும், அதன் இலக்கிய வளா்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயா்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சோ்த்த தமிழ்ப் பேரறிஞா்கள் மற்றும் சமூக மேம்பாட்டுக்கும், சமூக நீதிக்கும் உழைத்திட்ட தன்னலமற்ற தலைவா்கள் பெயரில், தமிழ்நாடு அரசின் திருவள்ளுவா் நாள் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில், 2019-ஆம் ஆண்டுக்கான ‘பெரியாா் விருது’ செஞ்சி ராமச்சந்திரனுக்கும், ‘அம்பேத்கா் விருது’ முனைவா் க.அருச்சுனனுக்கும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள் வழங்கும் விழா ஜனவரி 20-ஆம் தேதி சென்னை கலைவாணா் அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும். மேலும் தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பட உள்ளனா்.

ஏற்கெனவே, திருவள்ளுவா் திருநாள் விருதுகளுக்கான பெயா்கள் தமிழக அரசின் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது பெரியாா் விருதும், அம்பேத்கா் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com