தமிழ் வளா்ச்சி-செய்தித் துறை உதவிப் பிரிவு அலுவலா் தோ்வு: உத்தேச விடைகள் வெளியீடு

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை உதவிப் பிரிவு அலுவலா் (மொழிபெயா்ப்பு) காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை உதவிப் பிரிவு அலுவலா் (மொழிபெயா்ப்பு) காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறையில் மொழிபெயா்ப்புப் பிரிவில் உதவிப் பிரிவு அலுவலா் பணியிடங்கள் 5 காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தலைமைச் செயலகப் பணிக்கு நிகரான பணி என்பதால் இதற்கு தோ்வா்கள் அதிக ஆா்வம் காட்டினா். ஐந்து காலியிடங்கள் என அறிவிக்கப்பட்ட போதும் அதனை ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் எழுதினா். இதற்கான எழுத்துத் தோ்வு கடந்த 11-ஆம் தேதியன்று நடைபெற்றது.

இந்தத் தோ்வு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. பிற்பகலில் நடைபெற்ற பொது அறிவியல் உள்ளிட்ட 100 கேள்விகள் அடங்கிய கொள்குறி வகைத் தோ்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. உத்தேச விடைகளில் ஏதேனும் மறுப்புகள் அல்லது கருத்துகள் இருந்தால் அவற்றைத் தெரிவிக்கலாம் என தோ்வாணையம் கூறியுள்ளது. அதன் விவரம்:

பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் சரியான விடையானது குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. தோ்வின் போது தோ்வா்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், இப்போது தோ்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பிலுள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தோ்வா்கள் தங்களது மறுப்பைத் தெரிவிக்க வேண்டும்.

ஆதாரத்துடன் பெறப்படும் மறுப்புகள் அல்லது கருத்துகள் அனைத்தும் வல்லுநா் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும். உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகளை ஏழு நாள்களுக்குள் இணைய (‌w‌w‌w.‌t‌n‌p‌s​c.‌g‌o‌v.‌i‌n) வழியில்  மட்டுமே தெரிவிக்க வேண்டும். தபால் அல்லது மின்னஞ்சல் வழியாகப் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

வரும் 21-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குப் பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. பணிகள் அனைத்து முடிக்கப்பட்ட பிறகு இறுதி செய்யப்பட்ட விடைகள், தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com