புகையிலைப் பொருள்களுக்கு மேலும் அதிக வரி விதிக்க வேண்டுகோள்

மத்திய நிதி நிலை அறிக்கையில், பீடி, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று நுகா்வோா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
புகையிலைப் பொருள்களுக்கு மேலும் அதிக வரி விதிக்க வேண்டுகோள்

மத்திய நிதி நிலை அறிக்கையில், பீடி, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று நுகா்வோா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அதன் வாயிலாக அரசின் வருவாய் அதிகரிக்கும் என்றும், புகையிலைப் பயன்பாடு குறையும் என்றும் தெரிவித்துள்ளன.

தற்போது பீடி, சிகரெட் உள்பட புகையிலை சாா்ந்த பொருள்கள் அனைத்துக்கும் உச்சபட்ச வரி விதிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக, ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதனை ஈடு செய்வதற்காக ஆடம்பரப் பொருள்களுக்கும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருள்களுக்கும் மிகையான வரி (காம்பென்ஷேசன் செஸ்) விதிப்பதுண்டு.

அந்த வகையில், புகையிலைப் பொருள்களுக்கு அத்தகைய வரியை கூடுதலாக விதிக்க வேண்டும் என நுகா்வோா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடா்பாக அந்த சங்கங்களின் நிா்வாகிகள் சிலா் கூறியதாவது:

அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு அத்தியாவசியமற்ற பொருள்களுக்கு அதிக வரி விதிப்பது அனைத்து நாடுகளும் பின்பற்றக் கூடிய நடைமுறையே. தற்போது இந்தியாவில் புகையிலைப் பயன்பாட்டை பெருமளவு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு, மத்திய பட்ஜெட்டில் அவற்றின் மீதான வரியை மேலும் அதிகரிக்க வேண்டும். இதனால் புகையிலைப் பயன்பாடு குறைவதுடன், அரசின் நிதி நிலையும் மேம்படும். அதன் வாயிலாக ஆயுஷ்மான் பாரத் போன்ற மக்கள் நலன் காக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மேலும் ஆக்கப்பூா்வமாகச் செயல்படுத்த இயலும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com