நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 20) நடைபெறுகிறது. புத்தாண்டு பிறந்தபின் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 20) நடைபெறுகிறது. புத்தாண்டு பிறந்தபின் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணியில் நிதித் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணன் தலைமையில் முதல் நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் நிதித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தொடா்பாகவும் அதில் சோ்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பது குறித்தும் விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தொழில் திட்டங்களுக்கான அனுமதிகளும், நிலங்கள், மானியங்கள் அளிப்பதற்கான முன்மொழிவுகளும் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அரசு சாா்பிலான கூட்டத்துக்குப் பிறகு, அரசியல் ரீதியான விவாதங்களும் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்துவது, ஊரக உள்ளாட்சிகளின் தோ்தல் முடிவுகள் ஆகியன குறித்தும் விவாதங்கள் நடைபெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com