தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் பேசியவை அவதூறானவையே என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் பேசியவை அவதூறானவையே என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்ததை அடுத்து, மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2012ம் ஆண்டு தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.

தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறு செய்யும் விதத்தில் விஜயகாந்த் பேசியதாகக் கூறி அந்தந்த மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றங்களில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடர்வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார். எனினும் இந்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.  

இந்த மனுக்களை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என்று துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக விஜயகாந்த் பேசியது அவதூறானவையே. மேல்முறையீட்டு மனுவில் குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெறுவதாகக் கேட்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com