ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஹைட்ரோகாா்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் தேவையில்லை என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த  அறிவிப்பு தமிழக விவசாயிகள் மற்றும் அரசிய கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில் டெல்டா பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், மக்களின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதியானது மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com