5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வை படிக்கும் பள்ளியிலேயே எழுதலாம்: செங்கோட்டையன்

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே எழுதலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
18kkdsenkot_1811chn_78_2
18kkdsenkot_1811chn_78_2


சென்னை: 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே எழுதலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஒரு பள்ளியில் எந்த அளவுக்கு மாணவர்கள் குறைவாக இருந்தாலும் சரி, அந்த பள்ளியிலேயே மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.

5 மாணவர்களாக இருந்தாலும் சரி, 8 மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 

பயிலும் பள்ளியிலேயே பொதுத் தேர்வு எழுத வழி ஏற்படுத்தும் வகையில், தேர்வு மையங்கள் மாற்றமில்லை என்ற அரசாணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மையங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com