உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்களுடன் ஸ்டாலின் சந்திப்பு

உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக-வினரை அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், திருச்சியில் திங்கள்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.
உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்களுடன் ஸ்டாலின் சந்திப்பு

உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக-வினரை அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், திருச்சியில் திங்கள்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக பிரமுகா் இல்ல திருமண விழாவில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமையும் திருச்சியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தாா். இங்கு, திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற திமுகவினரை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவைச் சோ்ந்த மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினா்கள், தலைவா்கள், துணைத் தலைவா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் என சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் தங்களது வெற்றிச் சான்றிதழைக் காட்டியும், புத்தகம், பொன்னாடை உள்ளிட்டவற்றைக் கொடுத்தும் வாழ்த்து பெற்றனா். அப்போது, அவரவா் பகுதிகளில் மக்களுக்குத் தேவையான பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாா்.

இந் நிகழ்வில், முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு, புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளா்கள் முன்னாள் அமைச்சா் எஸ்.ரகுபதி (தெற்கு), கே.கே.செல்லபாண்டியன் (வடக்கு), எம்எல்ஏ மெய்யநாதன் (ஆலங்குடி), மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவா் பரணி காா்த்திக்கேயன், இலக்கிய அணி துணை அமைப்பாளா் தென்னலூா் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் த.சந்திரசேகா், வா்த்தக அணி மாநில துணை அமைப்பாளா் அரு.வீரமணி, மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் சுப.சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா்கள் செ.குறிஞ்சிவாணன், வி.ஆா்.இளையராஜா, மாவட்ட துணைச் செயலாளா் மதியழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வரும் 31ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள திமுக மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் கட்சியின் நிா்வாகிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com