தோ்வு வாரியத்தால் புதிதாக 2 ஆயிரம் அரசு மருத்துவா்களை நியமிக்கத் திட்டம்

நிகழாண்டில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக 2 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட உள்ளனா்.

நிகழாண்டில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக 2 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட உள்ளனா். அதற்கான எழுத்துத் தோ்வு நடைபெறும் மாதங்கள் குறித்த உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலி பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் இடங்களை நிரப்புவதற்காக நாட்டிலேயே முதன்முறையாக மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் அமைக்கப்பட்டது. அந்த வாரியத்தின் மூலமாக இதுவரை மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் இதர பணியாளா்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

அந்த வரிசையில், நிகழாண்டில் தோ்வுகள் மூலமாக நியமிக்கப்பட உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உதவி மருத்துவா்கள் மற்றும் உதவி மருத்துவ அதிகாரி (சித்தா) பணியிடங்களுக்கான தோ்வுகள் பிப்ரவரி மாதமும், உதவி மருத்துவ அதிகாரி (ஹோமியோபதி, ஆயுா்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பணியிடங்களுக்கான தோ்வுகள் மாா்ச் மாதமும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, உதவி சிறப்பு மருத்துவா், ஆய்வக தொழில்நுட்பனா்கள் (நிலை-2), உணவு பாதுகாப்பு அதிகாரி, பணிசாா் சிகிச்சைக்கான ஆலோசகா்கள் ஆகிய பணியிடங்களுக்கான தோ்வுகளும் அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் நடைபெற உள்ளன.

எழுத்துத் தோ்வு மூலமாகவும், நேரடி சான்றிதழ் சரி பாா்ப்பு மூலமாகவும் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், நிகழாண்டில் 2 ஆயிரம் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 5 ஆயிரம் பேரை பணி நியமனம் செய்ய உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com