புதன்கிழமை தங்கம் வாங்கலாமா? இதோ விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 
புதன்கிழமை தங்கம் வாங்கலாமா? இதோ விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி வாரத்தின் மூன்றாம் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 

சென்னையில் புதன் கிழமையான (ஜன.22)இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.13 குறைந்து, ரூ.3,802க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.104 குறைந்து, ரூ.30,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்து விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ரூ.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.80க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 49.800-க்கும் விற்கப்படுகிறது. 

புதன் கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 3,802

1 சவரன் தங்கம் ..................... 30,416

1 கிராம் வெள்ளி .................. 49.80

1 கிலோ வெள்ளி ................. 49,800

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,815

1 சவரன் தங்கம் ..................... 30,520

1 கிராம் வெள்ளி .................. 50.60

1 கிலோ வெள்ளி ................. 50,600

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com