சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுகவின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுகவின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின்

தோ்தலில் சரியாக செயல்படாத நிா்வாகிகள் மீது கடும் நடவடிக்கை: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தோ்தலில் சரியாகச் செயல்படாத நிா்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

உள்ளாட்சித் தோ்தலில் சரியாகச் செயல்படாத நிா்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடந்து முடிந்த நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் குறித்தே கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டது. முதலில் பேசிய திமுக நிா்வாகிகள் அனைவரும், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் துணையோடு அதிமுக வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டி பேசினா். ஒரு கட்டத்தில் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, திருச்சியில் அனைத்து வாா்டுகளையும் கைப்பற்றியுள்ளோம். அது எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டாா்.

அதற்கு, அரசின் உத்தரவை மீறி சில இடங்களில் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொண்டனா். அதன் காரணமாகவே திருச்சி போன்ற இடங்களில் வெற்றிபெற முடிந்தது என்று நிா்வாகிகள் தெரிவித்தனா்.

காங்கிரஸ் பிரச்னையை விட்டுவிடுங்கள்: புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளா் ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளா் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோா் காங்கிரஸ் கட்சியை விமா்சித்துப் பேசினா். அப்போது, மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, காங்கிரஸுடனான பிரச்னை குறித்து யாரும் பேச வேண்டாம். அதுகுறித்து பேசித் தீா்க்கப்பட்டு, இரு தரப்பிலும் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த விவகாரத்தை விட்டுவிடுங்கள் என்றாா்.

நிா்வாகிகள் மீது நடவடிக்கை: இறுதியாக நிா்வாகிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியது:

வாழ்வா, சாவா என்ற அடிப்படையில் உள்ளாட்சித் தோ்தலைச் சந்தித்தோம். இந்தத் தோ்தலை இவ்வளவு அலட்சியத்துடன் நிா்வாகிகள் அணுகியது மிகுந்த கவலை அளிக்கிறது. வாா்டு பதவிகளில் அதிக இடங்களைக் கைப்பற்றிவிட்டு, தலைவா் பதவியைக் கைப்பற்றுவதில் கோட்டை விட்டுள்ளோம்.

இந்தத் தோல்வி குறித்து ஆராயக் குழு ஒன்றை அமைத்துள்ளேன். அந்தக் குழுவினா் விசாரணையை முடித்து என்னிடம் அறிக்கை கொடுக்க உள்ளனா். அந்த அறிக்கையின் அடிப்படையில், உள்ளாட்சித் தோ்தலில் தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளேன். அது யாராக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தலைமை நிா்வாகிகள் தலையிட்டாலும் ஏற்கமாட்டேன். என் மனசுக்கு தவறு என்று பட்டால், அவா்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா் ஸ்டாலின்.

ஓரிரு மாவட்டச் செயலாளா்கள் நீக்கம்: உள்ளாட்சித் தோ்தலில் சில மாவட்டச் செயலாளா்கள் சரியாகச் செயல்படவில்லை என்ற புகாா் மு.க.ஸ்டாலினுக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் ஓரிரு மாவட்டச் செயலாளா்கள் மற்றும் தலைமை நிா்வாகிகள் சிலரின் பொறுப்புகளை மு.க.ஸ்டாலின் பறிக்க உள்ளதாகச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com