வில்சன் கொலைக்கு பொறுப்பேற்று குமரி மாவட்ட 6 எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்கு பொறுப்பேற்று குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ.,க்களும் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
வில்சன் கொலைக்கு பொறுப்பேற்று குமரி மாவட்ட 6 எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்கு பொறுப்பேற்று குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

குமரி மாவட்டத்தில் புதிதாக  தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டத் தலைவர் மற்றும் பொறறுப்பாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறும் போது, 'தமிழக அமைச்சர் ஜெயகுமார் என்னைப் பற்றி சில விசயங்கள் பேசி உள்ளார். இவர்கள் பொன். ராதாகிருஷ்ணனுக்கு சான்றிதழ் தர வேண்டாம். கூட்டணி தர்மம் இருப்பதால்தான் நான் மவுனமாக இருக்கிறேன் நேரில் பார்க்கும் போது அமைச்சர் ஜெயகுமாரிடம் சில விசயங்கள் பேச உள்ளேன்.

நடிகர் ரஜினிகாந்த் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போது ரஜினியை எதிர்த்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்று பலரும் ரஜினியை எதிர்க்கிறார்கள். திமுகவினருக்கு  வேறு அரசியல் தெரியாது.

ரஜினி 2 பத்திரிக்கைகளை சுட்டிக் காட்டி பேசினார். அரசியல் பேச பிழைப்பு இல்லாததால் திமுகவினர் ரஜினி குறித்து பேசுகிறார்கள். அவர்களுக்கு வேறு அரசியல் தெரியாது.  

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மணல் கடத்தலில் யார் ஈடுபட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். முன்னாள் எம்.எல். ஏ. அப்பாவு அவரை கண்ணாடியில் பார்த்து கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். நான் எனது உறவினர்கள் உள்ளிட்ட அனைவரது சொத்து கணக்கையும் கொடுக்க தயார். அப்பாவு அவரது சொத்து கணக்கை காட்ட வேண்டும். நான் எந்த விசாரணைக்கும் தயார்.

குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ.க்களும் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதற்கு வெட்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் பதவியை துறந்து விட்டு போக வேண்டும். இவர்கள் தீவிரவாதியை பார்த்து பயப்படுகிறார்கள். அச்சம் வந்தவர்கள் எதற்காக பதவி வகிக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணியினர் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி குறித்து இல்லாத பயத்தை தூண்டி இதனால் வில்சன் கொலை செய்யப்பட்டுள்ளார். வில்சன் கொலைக்கு பின்னர் இங்குள்ள மத தலைவர்கள் தங்கள் அருகதையை இழந்து  நிற்கிறார்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com