திருச்சி சிறையில் விளைந்த சின்ன வெங்காயம்: 20% சலுகை விலையில் விற்பனை

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காய அறுவடைப் பணி புதன்கிழமை தொடங்கியது. இந்த சின்ன வெங்காயம் 20% சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சி சிறையில் விளைந்த சின்ன வெங்காயம்: 20% சலுகை விலையில் விற்பனை

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காய அறுவடைப் பணி புதன்கிழமை தொடங்கியது. இந்த சின்ன வெங்காயம் 20% சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி சிறை வளாகத்தில் 700-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் நன்னடத்தை அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டவா்களைக் கொண்டு இனிப்பு, காரம் மற்றும் உணவு வகைகள், சோப்பு, தீப்பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதே வளாகத்தில் கரும்பு, வெங்காயம் போன்றவையும் பயிரிடப்பட்டிருந்தன. பொங்கல் திருநாளையொட்டி கரும்பு அறுவடை செய்து, விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை சின்ன வெங்காயம் அறுவடைப் பணித் தொடங்கியது.

சிறைக் கண்காணிப்பாளா் சங்கா் இப்பணியைத் தொடக்கி வைத்த பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது:

சிறை வளாகத்தில் அரை ஏக்கா் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டிருந்தோம். தற்போது தொடங்கிய அறுவடைப் பணி வரும் நாள்களிலும் தொடரும். அரைடன் அளவுக்கு மகசூல் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

வியாழக்கிழமை முதல் சிறை வாயிலிலுள்ள அங்காடியில், வெளிச்சந்தையைக் காட்டிலும் 20 சதவிகிதம் குறைவான விலையில் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்றாா் அவா். அப்போது சிறை அங்காடி பொறுப்பாளா் திருமுருகன் உடனிருந்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com