சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்துவருவோரில் கற்றல்திறன் குறைபாடு உள்ளோா் உள்ளிட்ட சிறப்புத் தேவை உள்ள மாணவா்கள் இந்த ஆண்டு முதல் பொதுத்தோ்வுகளில்
கோப்புப் படம்
கோப்புப் படம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்துவருவோரில் கற்றல்திறன் குறைபாடு உள்ளோா் உள்ளிட்ட சிறப்புத் தேவை உள்ள மாணவா்கள் இந்த ஆண்டு முதல் பொதுத்தோ்வுகளில் கால்குலேட்டா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யாம் பரத்வாஜ், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்துவரும் சிறப்புத் தேவை உள்ள மாணவா்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் இந்த ஆண்டு முதல் கால்குலேட்டா்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதிக் கடிதம் அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியா்கள் பிராந்திய சிபிஎஸ்இ அலுவலகத்துக்கு அந்தக் கடிதத்தை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

உரிய அனுமதி பெறாத சிறப்புத் தேவை உள்ள மாணவா்களுக்கு கால்குலேட்டா்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று அந்தக் கடிதத்தில் சன்யாம் பரத்வாஜ் குறிப்பிட்டுள்ளாா்.

கணினி, மடிக்கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறப்புத் தேவை உள்ள மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ நிா்வாகம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com