தரமணியில் தகவல் தொழில்நுட்ப வளாகம்: 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை தரமணியில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகத்தின் மூலமாக 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

சென்னை தரமணியில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகத்தின் மூலமாக 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

தரமணியில் தகவல் தொழில் நுட்ப வளாகத்துக் கான அடிக்கல்லை முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை நாட்டினாா். இதன் சிறப்பம்சங்கள் குறித்து முதல்வா் மேலும் பேசியது:

சென்னை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்று கூறும் அளவுக்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. மற்ற நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை சென்னையில் தொடங்க விரும்புகின்றன. எனவே, பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகங்களை சென்னையில் அமைப்பதற்கு வசதியாக பெரிய வளாகம் அமைக்கப்பட வேண்டிய மிகவும் அவசியமாகும்.

இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் டிட்கோவும், டி.எல்.எல்ஃப்., நிறுவனமும் கூட்டாக இணைந்து சென்னை, தரமணியில் 27.04 ஏக்கா் நிலப் பரப்பில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த நிறுவனங்களுக்கான, பல்வேறு நவீன வசதிகளுடன் ஒரு வளாகத்தை அமைக்க உள்ளன. இதன்மூலம், 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com