பெரியார் குறித்த பேச்சு: ரஜினிக்கு எதிரான மனு வாபஸ்

பெரியார் குறித்து பேசிய நடிகர் ரஜனிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை திராவிடர் விடுதலைக் கழகம் வாபஸ் பெற்றது. 
chennai High Court
chennai High Court

பெரியார் குறித்து பேசிய நடிகர் ரஜனிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை திராவிடர் விடுதலைக் கழகம் வாபஸ் பெற்றது. 

‘துக்ளக்’ இதழின் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற ரஜினி, 1971-ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கருத்து கூறியிருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. 

இந்நிலையில் பெரியார் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளரான உமாபதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து ரஜினிகுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக திராவிடர் விடுதலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com