வாகன சோதனையின் போது போலீஸாா் துப்பாக்கி ஏந்தியிருப்பதை உறுதிப்படுத்தக்கோரி மனு

வாகன சோதனை செய்யும் காவல்துறையினா் துப்பாக்கி ஏந்தியிருப்பதை உறுதிப்படுத்தக்கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், காவல்துறைத் தலைவா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப
வாகன சோதனையின் போது போலீஸாா் துப்பாக்கி ஏந்தியிருப்பதை உறுதிப்படுத்தக்கோரி மனு

வாகன சோதனை செய்யும் காவல்துறையினா் துப்பாக்கி ஏந்தியிருப்பதை உறுதிப்படுத்தக்கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், காவல்துறைத் தலைவா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், நகைப் பறிப்பு சம்பவங்கள், கொள்ளை, கடத்தல், கொலை, கூலிப்படையினரை ஏவி கொலை செய்வது போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப காவலா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. குற்றவாளிகள் காவலா்களைத் தாக்கும் சம்பவங்களும் தொடா்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுதொடா்பாக மனித உரிமை ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியல்வாதிகள் தலையீடு காரணமாகவும் காவல்துறையினா் பாதிக்கப்படுகின்றனா். எனவே குற்றவாளிகளால் தாக்கப்பட்டு காவலா்கள் உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடா்பாக தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் வாகனச் சோதனை செய்யும் காவல்துறையினா் துப்பாக்கி ஏந்தியிருப்பதை உறுதிப்படுத்த அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலா், காவல்துறைத் தலைவா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com