சூயஸ் நிறுவன குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்

சூயஸ் நிறுவன குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக்கோரி திமுக ஆர்ப்பாட்டம்

சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக்கோரி, கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக்கோரி, கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுனர். இதன் ஒரு பகுதியாக சூயஸ் குடிநீர் உரிமையை ரத்து செய்யக்கோரியும் குடியிருப்புப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதை கைவிடக்கோரி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பந்தயசாலை காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசை கண்டித்தும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சூயஸ் குடிநீர் திட்ட ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க மறுப்பதாகவும், குடிநீர் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

வார்டு வாரியாக குடியிருப்புப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமைப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு, தொற்று நோய் பரவும் எனவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குப்பை அள்ள பணம் வசூல் செய்யபடுவதாகவும், ஆனால் மாநகராட்சி நிர்வாகம் குப்பை அகற்றுவது இல்லை எனக் கூறிய நா.கார்த்திக், இத்திட்டங்களைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

காவல்துறை ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கும் கூட ஆளும்கட்சி நிர்பந்தம் காரணமாக அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டினார். இதே போக்கினை காவல்துறையினர் கடைப்பிடித்தால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தபடும் என்றார். 

இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com