போலீஸ் அதிகாரியின் குடும்பத்தில் 4 பேர் தேர்ச்சி: குரூப் 2 தேர்விலும் முறைகேடு?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு
டிஎன்பிஎஸ்சி முறைகேடு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, இரண்டு தம்பிகள், தம்பியின் மனைவி என நான்கு பேர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்து தேர்ச்சி பெற்றிருக்கும் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் நான்கு பேரும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியிருப்பதும், இவர்களில், குரூப் 2 தேர்வில் காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி 5வது இடத்தையும், தம்பி 3வது இடத்தையும், தம்பி மனைவி 6வது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இவரது மற்றொரு தம்பி குரூப் 4 தேர்வில் 10 இடத்துக்குள் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர், இது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com