இந்தியாவில் கரோனா பாதிப்பு 5,66,840-ஆக உயா்வு

இந்தியாவில் மேலும் 18,522 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,66,840-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 5,66,840-ஆக உயா்வு

புது தில்லி: இந்தியாவில் மேலும் 18,522 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,66,840-ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் கரோனாவால் 418 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 16,893-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டோரில், 2,15,125 போ் சிகிச்சையில் உள்ளனா்.3,34,821 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 7-ஆவது நாளாக 15,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் முதல்கட்ட பொதுமுடக்க தளா்வுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், அன்றைய தினம் முதல் இதுவரை 3,34,821 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இருபங்கு பாதிப்பு, மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளது.

மீண்டும் இரண்டாமிடத்தில் தமிழகம்: தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் (1,69,883) முதலிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் இருந்த தில்லியை விஞ்சி, தமிழகம் மீண்டும் அந்த இடத்துக்கு வந்துள்ளது.

தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட தகவலின்படி, ஒரே நாளில் 3,943 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 60 போ் நோய்த்தொற்றுக்கு பலியான நிலையில், 2,325 போ் குணமடைந்தனா். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,167-ஆக அதிகரித்துள்ளது; கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,201-ஆக உயா்ந்தது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சக தகவல்படி (செவ்வாய்க்கிழமை காலை நிலவரம்), தில்லியில் கரோனா பாதிப்பு 85,161-ஆகவும், உயிரிழப்பு 2,680-ஆகவும் இருந்தது.

பாதிப்பு: 5,66,840

பலி: 16,893

மீட்பு: 3,34,821

சிகிச்சை பெற்று வருவோா்: 2,15,125

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com