பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்: செங்கோட்டையன்

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்


ஈரோடு: தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு கடைசித் தேர்வை 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேர்வு வைத்த பின்னரே முடிவு வெளியிடப்படும்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.248 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்று ஆலோசித்து முடிவடுக்கப்படும். பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள் வருவாய்துறை, மருத்துவத்துறை என அனைவரது ஆலோசனைகள் கேட்கப்பட்டு பின்னர் தான் பள்ளிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைசசர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் மற்றும் கடமசெட்டிபாளையம் பகுதிகளில் ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலைகளையும் குடிநீர் தொட்டிகளையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அத்திகடவு - அவிநாசி திட்ட பணி, வரபாளையதில் 30 லட்சம் லிட்டர்கொள்ளளவு கொண்ட நீருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வேகமாக செயல்பட்டு வருகிறது. 
இதற்காக சோலார் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு இது குறித்த வழக்கு மன்றத்தில் உள்ளது என்று பதிலளித்தார். 

12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேர்வு வைத்த பின்னரே முடிவு வெளியிடப்படும். மீண்டும் பேருந்து இயங்கினால் மட்டுமே அவர்களுக்கு தேர்வு வைக்க முடியும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.248 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பாட புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்று ஆலோசித்து முடிவடுக்கப்படும். பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில் தான் வெளிடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது. 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும். 8ஆம் வகுப்பில் திறனாய்வு தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு 248 கோடி ரூபாய் நிதிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com