தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்காக 75,000 படுக்கை வசதி: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்காக 75,000 படுக்கை வசதி
தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்காக 75,000 படுக்கை வசதி


சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் விவரங்களை வெளியிட்டார்.

அதில், தமிழ்நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 98,392 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 56,021 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிக பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் 10 ஆயிரம் மருந்துகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்து 42,371 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை என்று மு.க. ஸ்டாலின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் கூறியுள்ளார். மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் யோசனை கூறினார். ஆனால், ஏற்கனவே தமிழகத்தில் 46 லட்சம் முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com